info.kalvisolai.com: மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்........

info.kalvisolai.com: மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்........: மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச...

கடினமான எழுச்சியை எதிர்நோக்கி இந்திய அணி


இரண்டு படுதோல்விகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் கௌரவத்தைக் காப்பற்றும் நோக்கத்துடன் நாளை எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி பலமான இங்கிலாந்து அணியை 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்கிறது.

லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக இங்கிலாந்து வீரர்களின் மனோநிலையில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்று நம்புவோமாக. அப்படி அவர்கள் கவனம் சிதறியிருந்தால் அதனி இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள நிச்சயம் முயற்சி செய்யும்.

இங்கிலாந்துடன் இந்த இரண்டு டெஸ்ட் போட்டியும் டிரா ஆனால் இங்கிலாந்து முதலிடம் செல்லும், இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்று ஒன்றை டிரா செய்தால் இங்கிலாந்து முதலிடம் செல்ல வாய்ப்பில்லை. பயிற்சி ஆட்டத்தில் கூட இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கும் பெரிய அளவுக்கு திருப்தியளிக்காத நிலையில் இந்திய எழுச்சி மிக மிகக் கடினமே.

இஷாந்த், பிரவீண் குமார், ஸ்ரீசாந்த், முனாஃப் படேல் அணிச்சேர்க்கையா அல்லது முனாஃப் படேலுக்கு பதிலாக அமித் மிஷ்ரா வாய்ப்பளிக்கப்படுவாரா என்று தெரியவில்லை.

இங்கிலாந்து மண்ணில் கடந்த 2 ஆண்டுகளாக பலமான இங்கிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு எதிராக துவக்க வீரர்கள் அஸ்திவாரம் இருந்தால் மட்டுமே எதிரணியினர் இன்னிங்ஸ் ஒன்றில் 400 ரன்களை எட்டியுள்ளனர்.

2007ஆம் ஆண்டு இந்தியா அங்கு சென்றிருந்தபோது வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக் துவக்க ஜோடி 322 ரன்களை 53.67 என்ற சராசரியில் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை இருவருமே இல்லை யாரைக் கேட்பது, ஸ்ரீகாந்தைத்தான் கேட்கவேண்டும்.

சேவாகும், கம்பீரும் இதுவரை இணைந்து 59.18 என்ற சராசரியில் 3,551 ரன்களை எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து கடைசியாக உள்நாட்டு டெஸ்ட் தொடரை 2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இழந்தது அப்போதும் துவக்க வீரர்களான கிரேம் ஸ்மித், நீல் மெக்கன்சியின் அற்புதத் துவக்கமே வெற்றியைத் தீர்மானித்தது.

இந்த ஆண்டு இந்தியா 6 டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டு மண்ணில் விளையாடியுள்ளது, இதில் ஒரேயொரு போட்டியில் மட்டும்தான் சேவாக், கம்பீர் துவக்கம் நமக்குக் கிடைத்தது. 

கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில் அதாவது 32 இன்னிங்ஸ்களில் 3 முறைதான் இங்கிலாந்து பந்து வீசாளர்கள் எதிரணியினரை ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களை அடிக்க விட்டுள்ளனர்.
 முந்தையது|அடுத்தது 

ஆப்கான்: 30 சிறுவர்களை கடத்தினர் தாலிபான்கள்

பாகிஸ்தானை சேர்ந்த 30 சிறுவர்களை தாலிபான்கள் கடத்தி சென்றுள்ளனர். 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி அரசு நிர்வாகத்தின் கீழ் இல்லை.தீவிரவாதிகளின் ஆதிக்கமே அங்கு ஓங்கியுள்ளது. 

இந்நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாஜார் என்ற பழங்குடியின பகுதியை சேர்ந்த 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் 30 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை அறியாமல் அச்சிறுவர்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த தாலிபான் தீவிரவாதிகள் அந்த 30 சிறுவர்களையும் கடத்தி சென்றுவிட்டதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.